எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை. எங்கிருந்தோ வந்த குளிர்காற்றின் தீண்டலில் தூக்கம் கலைந்து எழுந்த போது சின்னதாய் தூறல் விழ ஆரம்பித்திருந்தது. அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் ஜன்னலின் அருகில் வந்து அமர்ந்தேன். தூறல் இப்போது பெருத்து பெரும் மழையாய் கொட்ட தொடங்கியது. விடிய விடிய விழித்திருக்கும் வீதியில் அன்று மட்டும் அரவம் இல்லை. வழக்கமாய் நடக்கும் நள்ளிரவு நாய்கள் மாநாடு அன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனக்கு துணையாய் என் வீட்டிற்கு எதிரில் நின்றிருந்த மரங்களும் ஆங்காங்கே சில மின் கம்பங்கள் மட்டுமே. Continue reading “ஒரு மழை இரவின் நட்பு”